1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (17:50 IST)

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்:வெளியுறவுத்துறை அறிவிப்பு

ஜப்பானில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க உள்ளார் என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

வளர்ச்சியடைந்த 20 நாடுகளான அர்ஜெண்டினா, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, துருக்கி, இங்கிலாந்து, சீனா, துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைப்பை சுருக்கமாக ஜி-20 என்று அழைக்கின்றனர்.

இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு ஜப்பான் நட்டின் ஒசாகா நகரில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் ஜூன் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பிரதமர் மோடி பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை இன்று அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் தலைவர்கள் பிரத்மர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.