புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (17:49 IST)

மீண்டும் மக்களிடம் பேசுகிறார் பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது முதலே அவ்வப்போது நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசி வருகிறார் என்பது தெரிந்ததே
 
சமீபத்தில் அவர் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றால் நாடு 21 வருடங்கள் பின்னோக்கி சென்று விடும் என்று கூறியிருந்தார் 
 
இந்த நிலையில் நாளை காலை 9 மணிக்கு மீண்டும் மக்களிடம் பிரதமர் மோடி பேச இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டும், கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வீடியோ மூலம் நாளை காலை 9 மணிக்கு சில முக்கிய தகவல்களை மக்களிடம் பகிர உள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியை நாளை காலை ஒன்பது மணிக்கு என்ன பேசப் போகிறார் என்பது அரிய நாட்டு மக்கள் மிகுந்த பரபரப்புடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது