1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2020 (19:41 IST)

பிரதமர் மோடியின் தாயார் கொரோனா தடுப்பு பணிக்கு உதவி !!

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.  இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.  இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினக்கூலிகளாக உள்ள மக்கள் மற்றும் அதிக அளவில் பணியில் ஈடுபடும் கட்டிய தொழிலாளர்கள், குழந்தைகள் போன்றவர்கள் உணவுக்கு கஷ்டப்படும்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் பசி பட்டிணியையும் , வேலையில்லாத தொழிலாளர்களின் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல நல்ல முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் நிவாரண பொருட்களும் நிதி உதவியும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், தான் சேமித்து வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கொடுத்து உதவியுள்ளார்.