புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2017 (10:48 IST)

ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்து - 18 பேர் பலி

ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதியில் படகு சவாரி செய்த போது ஏற்பட்ட விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.


 

 
ஆந்திராவில் விஜயவாடா அருகிலுள்ள பவானி தீவில் இருந்து பவித்ர சங்கமம் என்ற இடத்திற்கு நேற்று சிலர் கிருஷ்ணா நதி வழியாக சுற்றுலா பயணிகள் சென்றனர். அப்போது, படகில் 38 பேருக்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக தெரிகிறது.  இதனால், பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்தது. யாரும் உயிர் காக்கும் கவசத்தை அணியவில்லை. இதனால் பலரும் நீரில் மூழ்கினர். 
 
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர் 20 பேரை உயிருடன் மீட்டனர்.  ஆனால், 18 பேர் பலியாகிவிட்டனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.


 

 
மொத்தம் 8 குடும்பத்தை சேர்ந்த நபர்கள், அந்த படகை வாடகைக்கு எடுத்து சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.