சிகரெட் உள்பட புகையிலை பொருட்கள் மீது புதிய எச்சரிக்கை விளம்பரம்!
நாட்டில் புகைப்பிடிப்பது தீமை, உடல் நலத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் தீங்கு, கேன்சர் போன்ற நோய்கள் வரக் காணரமாகும் என்று எத்தனையோ அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் அறிவித்தாலும் மக்கள் அதன் தீவிரத்தை அறியாமல் வாங்கிப் புகைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது டிசம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய எச்சரிக்கை விளம்பரம் இடம் பெற வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது :
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது புதிய சுகாதார எச்சரிகை படம் மற்றும் வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். டிசம்பர் 1 ஆம் தேதி முதல் விற்பனையாகும் புகையிலைப் பொருட்களீல் புதிய எச்சரிக்கை வாசமம் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.