திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (13:47 IST)

பிபிசியை தடை செய்ய வேண்டும்?? – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

பிபிசி ஊடகத்தை தடை செய்ய கோரி ட்விட்டரில் ஹேஷ்டேகுகள் பகிரப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை மையமாக கொண்டு இயங்கும் செய்தி ஊடகமான பிபிசி இந்தியாவில் பல்வேறு மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் பிபிசி ஹிந்தி தளத்தில் சமீபத்தில் மத்திய அரசின் 370 சட்டம் நீக்கம் குறித்து வெளியிட்டுள்ள கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு சம்பவங்களில் மத்திய அரசின், பிரதமரின் நடவடிக்கைகளை பிபிசி விமர்சித்து செய்திகள் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் பிபிசியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து #BanBBC என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.