1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Malinga changes his decision on retirement

மலிங்கா அந்தர் பல்டி.. டி20-களில் விளையாட விருப்பம்

மலிங்கா
இலங்கை அணியின் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, இன்னும் இரண்டு ஆண்டுகள் டி20-களில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்பு கடந்த ஜூலை மாதம், ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனை தொடர்ந்து வருகிற 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலககோப்பை டி20 தொடருடன் தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக மலிங்கா அறிவித்தார். இந்நிலையில் தற்போது அந்த முடிவிலிருந்து அவர் பின்வாங்கியுள்ளார்.

இது குறித்து மலிங்கா “டி 20 போட்டிகளில் 4 ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என்பதால், எனது திறமையை கொண்டு இன்னும் இரண்டு ஆண்டுகள் டி20 போட்டிகளில் என்னால் விளையாட முடியும்” என கூறியுள்ளார். இதன் மூலம் லசித் மலிங்கா அடுத்த இரண்டு ஆண்டுகள் டி20 போட்டிகளிள் விளையாடுவார் என தெரியவருகிறது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை