1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (07:49 IST)

’பிகில்’ வசூல்: சம்பந்தமே இல்லாமல் டுவிட்டரில் சண்டை போடும் பிரபலங்கள்

விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இருப்பினும் இந்த படம் எத்தனை கோடி வசூல் செய்தது? யார் யாருக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது? என்ற தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை. மொத்தத்தில் இந்த படம் லாபகரமான படமா? அல்லது தோல்வியை கொடுத்த படமா? என்ற தகவலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை 
 
ஆனால் பிகில் படத்துக்கு சம்பந்தமே இல்லாத இருவர் இதுகுறித்து டுவிட்டரில் சண்டை போட்டு வருகின்றனர். பிரபல தயாரிப்பாளருர் ஒருவர் தனது டுவிட்டரில் பிகில் படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ 80 கோடி ஷேர் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து விஸ்வாசம் படத்தை விநியோகம் செய்த கேஜேஆர் நிறுவனம் கிண்டலுடன் கூடிய ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளது. இதனையடுத்து இரு தரப்பினரும் மாறி மாறி பிகில் படம் மற்றும் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூல் குறித்த தகவல்களை வெளியிட்டு வாதம் செய்துவருகின்றனர்.
 
இதுகுறித்து கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டரில், ‘அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்த்து குத்தம் சொல்றதுக்கு முன்னாடி, தான் வீடு சரியாக இருக்கானு பார்க்கணும் என்று டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் பிகில் படம் வெற்றியா தோல்வியா என்று சொல்லவேண்டிய ஸ்கிரீன் சீன்ஸ் நிறுவனமும் ஏஜிஎஸ் நிறுவனமும் அமைதியாக இருக்க சம்பந்தமில்லாத இருவர் இது குறித்து விவாதம் செய்து வருவது நகைப்புக்குரியதாக இருக்கிறது