லெமன் டீ இருக்குன்றான்... ஆனா மெஜாரிட் ‘டீ’ இல்லன்றான் - கலக்கல் மீம்ஸ்

Last Updated: வெள்ளி, 18 மே 2018 (15:35 IST)
கர்நாடகாவில் யார் முதல்வர் என தீர்மானிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை கர்நாடக சட்டசபையில் நடைபெற இருக்கிறது.

 
ஆட்சி அமைக்க காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும், பாஜக எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் இருப்பதால், குதிரை பேரம் நடத்த வாய்ப்பிருப்பதாக கருத்து நிலவியது.

 
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எடியூரப்பாவால் கண்டிப்பாக மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை உருவாக்கி பதிவு செய்து வருகின்றனர். 
 
அப்படி, வைரலாக பரவி வரும் சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு... இதில் மேலும் படிக்கவும் :