திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 17 மே 2018 (19:42 IST)

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க அமேசானிடம் டீல் பேசிய இளைஞர்!

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்று அதன் வாக்கு எண்ணிக்கை 15 ஆம் தேதி எண்ணப்பட்டது. இதில் பாஜக அதிகப்படியாக 104 இடங்களில் வெற்றி பெற்றது.
 
ஆனால், இது பெரும்பான்மை இல்லை என்பதால், 78 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, பாஜகவை ஆட்சியமைக்காமல் தடுக்க, 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைத்தது. 
 
ஆனால், காங்கிரஸ் கட்சியின் திட்டம் வீண்போனது. பாஜக இன்று கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் இளைஞர் ஒருவர், அமேசான் இணையதளத்தில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களை விலைக்கு கேட்டுள்ளார். 
 
அந்த இளைஞர், அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் ட்விட்டர் கணக்கிற்கு ட்விட் ஒன்றை செய்துள்ளார். அதில், தனக்கு ஷாப்பிங் செய்வதில் சிக்கல் உள்ளதாக கூறியிருக்கிறார். 
 
அதற்கு அமேசான் என்ன பிரச்சனை என்னவென்று கேட்டுள்ளது. அதற்கு, மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் 7 எம்எல்ஏக்களை வாங்கி, அவர்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு பரிசளிக்க வேண்டும், ஏதாவது நல்ல டீல் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறி கிண்டல் செய்துள்ளார்.