Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கர்நாடக முதல்வர் யார்? - நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

Last Updated: வெள்ளி, 18 மே 2018 (11:52 IST)
கர்நாடகா சட்டமன்றத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ்-மஜத கூட்டணியிடம் போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும், எடியூரப்பாவை முதல்வராக ஆளுநர் நியமித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ப்பட்டது.
 
இந்த வழக்கு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களிடம் போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும் பாஜகவை ஆட்சி அழைக்க அளித்தது தவறு என காங்கிரஸ் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த கேள்வியை நீதிபதியும் எழுப்பினார். ஆனால், எங்கள் பக்கமும் போதுமான எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள், காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் சிலர் எங்களை ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள் என வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்தார்.
 
அப்படியெனில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு நாங்கள் தயாரக இருக்கிறோம். எனவே, குதிரை பேரத்திற்கு வழி வகுக்காமல் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவும், மெஜாரிட்டியை நிரூபிக்கும் வாய்ப்பை காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கே முதலில் கொடுக்க வேண்டும். வாக்கெடுப்பை வீடியோ எடுக்க வேண்டும் என காங்கிரஸ்-மஜத வழக்கறிஞர் அபிஷேக்மனு சிங்வி வாதாடினார். 
 
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை நாளை நடத்த உத்தரவிடக்கூடாது என பாஜக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறினார். ஆனால், நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என கர்நாடக மாநில டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :