வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 மே 2018 (15:44 IST)

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்த கொடூரம்

16 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்குநாள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனாலும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறைந்தபாடில்லை.
 
ஜார்கண்ட் மாநிலம், பகுர் மாவட்டத்தில் உள்ள கன்கர்போனா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட இளைஞர் ஒருவர், சிறுமியின் வீட்டிற்குள் சென்று சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின் கொடூரத்தின் உச்சமாய், அச்சிறுமி மீது தீ வைத்துள்ளான் அந்த அயோக்கியன்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர். சிறுமி தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர செயலை செய்த மனித மிருகத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.