புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 19 நவம்பர் 2022 (22:33 IST)

கோவாவில் நாளை சர்வதேச திரைப்பட விழா..

film festival
நாளை கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கப்படவுள்ளது.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம்  இணைந்து நாளை கோவாவில்  53 வது சர்வதேச திரைப்பட விழா நடத்துகிறது.

இந்த விழா நாளை ( 20 ஆம் தேதி) தொடங்கி  வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறு எனவும் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், ககலா அகாடமிக்கு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில், இந்த விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில்,  ஆஸ்கார் விருது பெற்ற காந்தி  படம் உள்ளிட்ட படங்களும், நல்ல கதையம்சம் கொண்ட 25 படங்கள் திரையிடப்பட உள்ளாதாகவும்,  தமிழ் படங்களின் சார்பில், சூர்யாவின் ஜெய்பீம், குரங்கு பெடல், கிடா ஆகிய 3 படங்கள் திரையிடப்படவுள்ளன.

இத்துடன், ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படமும் இதில் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj