“ஏன் சஹாலுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பில்லை…” தினேஷ் கார்த்திக் பதில்!
உலகக்கோப்பை தொடர் முழுவதும் யஷ்வேந்திர சஹால் ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.
இந்திய அணி உலகக்கோப்பையில் அரையிறுதியோடு வெளியேறியது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதையடுத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணி விரைவில் தலைமை மாற்றத்துக்கு ஆளாகலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் யஷ்வேந்திர சாஹல் ஒரே ஒரு போட்டியில் கூட பயன்படுத்தவில்லை. இதுகுறித்து இப்போது தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். அதில் “சஹாலோ அல்லது ஹர்ஷல் படேலோ தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை என்று அதிருப்தி அடையவில்லை. ஏனென்றால் தொடரின் தொடக்கத்திலேயே கேப்டனும், பயிற்சியாளரும்,அவர்களிடம் தெளிவுபடுத்தி விட்டார்கள். தேவைப்பட்டால் மட்டுமே உங்களை அணியில் எடுப்போம். இல்லை என்றால் கடினம்தான் என்று தெளிவுபடுத்திவிட்டார்கள். அதனால் அவர்கள் இருவரும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால், எப்படி தங்களது சிறப்பானதைக் கொடுக்க முடியும் என்று காத்திருந்தனர்” என்று கூறியுள்ளார்.