புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (10:38 IST)

கத்துவா சிறுமி கொலை - 9 பாஜக அமைச்சர்கள் ராஜினாமா

ஜம்மு காஷ்மீரில் சிறுமி ஆசிஃபா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜக அமைச்சர்கள் 9 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா, கடந்த ஜனவரி மாதம் கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல நாட்கள் பட்டினி போட்டு, மயக்க மருந்து கொடுத்து, தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
ஒரு சிறுவன் உட்பட 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடந்த போராட்டத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த இரு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் அமைச்சரவையில் உள்ள அனைத்து பா.ஜ.க. அமைச்சர்களையும் ராஜினாமா செய்யுமாறு பா.ஜ.க மேலிடம் உத்தரவிட்டது. இதனையடுத்து பாஜகவைச் சேர்ந்த 9 அமைச்சர்களும் நேற்று ராஜினாமா செய்தனர்.