Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் செய்ததை கனிமொழி,அழகிரி செய்தார்களா? தம்பிதுரை பாய்ச்சல்(வீடியோ)

Last Modified வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (16:03 IST)
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்ததற்கும், காவிரி பிரச்சினையையும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என துணை சபாநாயகர் கூறியுள்ளார்.

 
கரூரில் நடைபெற்ற பொது மக்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
 
நேற்று தமிழகம் வந்த பிரதமருக்கு கருப்பு கொடி காட்டியது என்பது சரியானது அல்ல. அவர் தமிழகத்திற்கு வந்ததற்கும், காவிரி நதி பிரச்சினையையும் சம்பந்தப்படுத்த வேண்டாம், காவிரி பிரச்சினை தமிழகத்திற்கு முக்கியமானதாகும். மேலும் தேசிய கட்சிகள் எதுவும் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண முன்வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். 98-99 ல் காவிரி பிரச்னைக்காக நானே ராஜினமா செய்தேன். வாழப்பாடி ராமமூர்த்தியும் ராஜினமா செய்தார். அப்போது கூட்டணி கட்சியாக இருந்தோம். இப்போதைய நிலை எதிர்க்கட்சியாக உள்ளோம். 
 
23 நாட்கள் அவை முடக்கப்பட்டது. இனியாவது தேசிய கட்சிகள் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் இப்போது தான் உணர்வுபூர்வமான மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது வன்முறையாக மாறிவிடக் கூடாது. காவிரி பிரச்சனையில் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நம்பிக் கொண்டு இருக்கிறோம். மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்தே ஆக வேண்டும்.
 
துணை சபாநாயகர் என்பது ஆளுகின்ற பா.ஜ.க கொடுத்த பதவி கிடையாது என்றும், அது எதிர்கட்சி அந்தஸ்து உடையது என்றும், ராஜிநாமா செய்வதற்கு நானே முன்னாதாரணம் ஏனென்றால், 98ம் ஆண்டு, பா.ஜ.க ஆட்சியில் கேபினேட் அமைச்சராக இருக்கும் போது, நானே ராஜிநாமா செய்திருக்கின்றேன், ஆனால் தி.மு.க வினர் கனிமொழியும், அழகிரியும் ராஜினாமா செய்தார்களா? 
 
தற்போது, ராஜினாமா செய்திருந்தால் மக்களவையில் குரல் கொடுத்திருக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்


இதில் மேலும் படிக்கவும் :