புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 1 மார்ச் 2018 (01:02 IST)

இக்கட்டான நிலையில் 8 மாணவிகள்: கைகொடுத்து உதவிய இன்ஸ்பெக்டர்

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் இக்கட்டான நிலையில் இருந்த 8 மாணவிகளுக்கு சரியான நேரத்தில் உதவிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தெலுங்கானா மாநிலத்தில் நேற்று பொதுத்தேர்வு தொடங்கியதை அடுத்து இந்த தேர்வை எழுத ஐதராபாத்தை சேர்ந்த எட்டு மாணவிகள் பேருந்து ஒன்றில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். தேர்வு ஆரம்பிக்க ஒருசில நிமிடங்களே இருந்ததால் மாணவிகள் பதட்டத்தில் இருந்த நிலையில் திடீரென பேருந்து பிரேக் டவுன் ஆகி நடுவழியில் நின்று விட்டது.

தேர்வு எழுதும் பள்ளி இரண்டு கிலோமீட்டரே என்றாலும் அங்கிருந்து எப்படி செல்வது என்று அந்த மாணவிகள் தவித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாக ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு, எட்டு மாணவிகளின் நிலைமையை உணர்ந்து தானே அவர்களை பள்ளிக்கு தனது காரில் அழைத்து செல்ல முடிவு செய்தார். இதனையடுத்து அந்த எட்டு மாணவிகளும் போலீஸ் பேட்ரோல் வாகனத்தில் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு சென்று தேர்வை எழுதினர். சரியான சமயத்தில் உதவி செய்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு அவர்களுக்கு சமூக இணையதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.