Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சுமார் 9 லட்சம் பேர் எழுதும் பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்

Last Modified புதன், 28 பிப்ரவரி 2018 (06:24 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை
9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதுகின்றனர்

சென்னையில் மட்டும் இந்த தேர்வை மொத்தம் 50 ஆயிரத்து 584 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதேபோல் புதுச்சேரியில்
மொத்தம் 15 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கின்றனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதலாக 278 புதிய தேர்வு மையங்கள் மாணவர்களின் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் ஏற்கனவே ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. மாணவர்கள் இந்த நுழைவுச்சீட்டை பிரிண்ட் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்

மாணவர்கள் காப்பி அடிப்பதை தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு சுமார் 4 ஆயிரம் பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் தேர்வுப்பணியை கண்காணிப்பார்கள்

தேர்வு மையத்தில் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு குறித்த புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றால் உடனே தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு 8012594105, 8012594115, 8012594120, 8012594125 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பேசலாம்.இந்த அறை தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :