வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 22 ஜூன் 2019 (15:52 IST)

மருத்துவ கல்லூரிக்கு பின்னால் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள் – பீகாரில் அதிர்ச்சி

பீகாரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பின்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பின்பகுதியில் மேம்பாட்டு பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அதிலிருந்து சில மனித மண்டை ஓடுகள் கிடைத்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உடனடியாக காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். காவலர்கள் வந்த பிறகு அவர்கள் உத்தரவின் பேரில் மீண்டும் அங்கே தோண்டியபோது மண்டை ஓடுகளாய் வந்து கொண்டே இருந்திருக்கின்றன.

அந்த மண்டையோடுகளை சேகரித்த போலீஸார் நூற்றுக்கும் அதிகமான மண்டையோடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவற்றை சோதனைக்காக மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து பல்வேறு வகைகளிலும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் போலீஸார்.

மண்டையோடுகள் எடுக்கப்பட்ட இடத்திற்கு அருகிலிருக்கும் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையில்தான் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் அனுமதிகப்பட்டுள்ளனர். 105 குழந்தைகள் இந்த நோயால் இறந்துவிட்ட நிலையில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.