வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (17:42 IST)

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடமா? கூகுளின் செயலால் கடுப்பான கன்னட மக்கள்!

கூகுளில் இந்தியாவின் அசிங்கமான மொழி என்று தேடும் போது அது கன்னடா என்று காட்டியதால் அம்மொழி பேசும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே அசிங்கமான மொழி என்று கூகுளில் தேடும் போது கன்னடா என்று காட்டியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கன்னட மொழி பேசும் மக்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து பலரும் கூகுளுக்கு கோபமாக கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கன்னட மொழியின் சிறப்பு பற்றி மெயில் அனுப்பி வருகின்றனர். இது தொடர்பாக கூகுள் நிர்வாகம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.