வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (15:31 IST)

நாங்கள் தேடுபொறி நிறுவனம், விதிவிலக்கு தாருங்கள்: டெல்லி ஐகோர்ட்டில் கூகுள் கோரிக்கை!

நாங்கள் சமூக வலைதளங்கள் இல்லை என்றும் தேடுபொறி நிறுவனம் என்பதால் எங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் கூகுள் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் கோரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சமீபத்தில் மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கான புதிய விதிகளை அமல்படுத்தியது என்பதும் இந்த விதிகளை பின்பற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது ஃபேஸ்புக் வாட்ஸ்அப் டிவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைதளங்களும் மத்திய அரசின் இந்த புதிய விதிகளை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்தில் அறிவித்தது 
 
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ளது சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகள் என்றும் ஆனால் நாங்கள் சமூக வலைதளங்கள் இல்லை என்றும் தேடுபொறி நிறுவனம் என்பதால் எங்களுக்கு இந்த புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது
 
இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு விதிவிலக்கு தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்