திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 25 ஏப்ரல் 2018 (13:09 IST)

நண்பர்களுடன் படுக்கையை பகிருமாறு வற்புறுத்திய கணவன் - தற்கொலை செய்த மனைவி

நண்பர்களுடன் படுக்கையை பகிறுமாரு தனது கணவரே கொடுமை செய்ததால், மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
பெங்களூர் கெங்கேரி பகுதியில் வசிப்பர் அசோக். இவருக்கும், சுப்ரியா(24) என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்கள் முன்பு திருமணமாகியது. கேரளாவுக்கு தியான வகுப்புக்கு சென்ற போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
 
திருமணத்திற்கு பின்பு, சுப்ரியாவை தனது நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு அசோக் வற்புறுத்தியுள்ளார். இதற்கு சுப்ரியா மறுப்பு தெரிவிக்க, மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அசோக் துன்புறுத்தியுள்ளார். ஆனால், இதுபற்றி தனது பெற்றோரிடம் சுப்ரியா எதுவும் கூறவில்லை எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், அசோக் தன்னை கொடுமைப்படுத்தவே, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அதன்பின் அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, சுப்ரியாவின் பெற்றோர்கள் அசோக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
இதையடுத்து, வரதட்சணை கொடுமை, வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அசோக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.