செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (09:15 IST)

பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதும் தடை?? – பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

தீபாவளி நெருங்கி வரும் வேளையில் பட்டாசு வெடிக்க ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ள நிலையில் மற்ற மாநிலங்கள் முழுவதிலும் தடை விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி நெருங்கி வருவதால் நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கு ராஜஸ்தான் அரசு திடீர் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால டெல்லி மற்றும் சுற்று வட்டார மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பரிசீலித்துள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பட்டாசு விற்பனை பெரும் நஷ்டத்தை சந்திக்கலாம் என கூறப்படும் நிலையில் கொரோனா காரணமாக தென்னிந்திய மாநிலங்கள் சிலவற்றிலும் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் பெரும் இழப்பை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.