செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2020 (16:45 IST)

இந்தியாவில் இந்த நகரங்களில் எல்லாம் தண்ணீர்ப் பற்றாக்குறை அபாயம்! அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

இந்தியாவில் உள்ள 30 பெருநகரங்களில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகில் உள்ள பெருநகரங்கள் எல்லாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனையாக தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுன் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்நிலையில் இப்போது சர்வதேச இயற்கை நிதியம் நடத்திய ஆய்வின் முடிவில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் 100 பெருநகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் 35 கோடி மக்கள் வசிப்பார்கள் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ், புணே, ஸ்ரீநகர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 30 நகரங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.