புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (20:12 IST)

லதா மங்கேஷ்கருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல்!

இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று உயிரிழந்தார்.  இ ந் நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி   நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்படு ஒரு மணி  நேரம் வை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 இன்று காலையில் மாநிலங்களவை கூடியதும் அவைத்தலைவர்  வெங்கய்யா நாயுடு லதா மங்கேஷ்கருக்கு  ம் இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை  வாசித்தார்.  அப்போது, அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது

மேலும், மக்களவையில் சபா நாயகர் ஓம் பிர்லா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கள் குறிப்பு வாசித்தார். இதனால் ஒரு மணி நேரம் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.