1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 7 பிப்ரவரி 2022 (08:33 IST)

நாளை பொது விடுமுறை: அரசு அதிரடி அறிவிப்பு!

நாளை பொது விடுமுறை என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் இன்று காலை காலமானதை அடுத்து அவரது இறுதி சடங்கு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி பொது விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
 
இதனை அடுத்து நாளை மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது