புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (11:46 IST)

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி: மத்திய அரசின் அதிரடி பரிந்துரை!!

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்னர் மத்திய மற்றும் மாநில அரசு   பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீது 10-க்கும் மேலான வரிகளை விதித்து வந்தன. 


 
 
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பெட்ரோலிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. எனெனும் மாநில அரசு பெட்ரோ, டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை.
 
இன்னும் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 17 சதவீதம் முதல் 31 சதவீதமாக உள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அதிரடி பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
 
அருண்ஜெட்லி கூறியதாவது, பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை உடனடியாக குறைக்கும்பட வேண்டும். நாடு முழுவதும் ஒரே சீரான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், பெட்ரோலிய பொருட்கள் மீதான அதிகமான வாட் வரி விரைவில் குறைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.