Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தீபிகாவை நினைத்து உருகும் பிரபல ஹாலிவுட் ஹீரோ


Abimukatheesh| Last Updated: சனி, 29 ஜூலை 2017 (14:33 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல், பாலிவுட் நடிகை தீபிகாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

 

 
ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவரான வின் டீசல் பாஸ்ட் அண்ட் ஃபுரியஸ் படங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். இவர் தன்னுடன் படங்களில் நடிப்பவர்களிடம் மிகவும் பாசத்துடன் பழக கூடியவர். பால் படப்பிடிப்பின் இறந்துவிட்டார். படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்தில் இவரது நெருங்கிய நண்பர் பால். வின் டீசல் அவ்வப்போது அவரது நினைவுகளில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
 
அண்மையில் வெளியான XXX படம் மூலம் பாலிவுட் நடிகை தீபிகா ஹாலிவுட்டில் அறிமுகமானார். இதனால் தீபிகாவிற்கு வீன் டீசலுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட தீபிகா, வின் டீசலுடன் உள்ள உறவு பற்று கூறும்போது, அவர் ஒரு தனித்துவமான நண்பர் என்று குறிப்பிட்டார்.
 
இந்நிலையில் வின் டீசல் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிகாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :