முடியை பாத்தியா? ஹேர்ஸ்டைலை கிண்டல் செய்த ஆசாமிகள்! – குத்திக் கொன்ற கும்பல்!
ஆந்திர மாநிலத்தில் சிறுவனின் தலைமுடியை கிண்டல் செய்த இருவரை கும்பல் ஒன்று குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பெடமாண்டி என்ற பகுதியில் ராஜாபாபு, காசி சீனு என்ற இருவர் மதுக்கடை ஒன்றில் மதுவாங்கி அருகே அமர்ந்து அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கு அருகே 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அமர்ந்து மது அருந்தியுள்ளது. அதில் இருந்த 17 வயது சிறுவன் ஒருவனின் தலைமுடியை ரஜாபாபுவும், காசி சீனுவும் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் பாட்டில்களை உடைத்து குத்தி தாக்கியுள்ளனர். இதனால் ராஜாபாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சம்பவ இடம் விரைந்த போலீஸார் காசி சீனுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்துள்ளனர். சிறுவன் மட்டும் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.