சீதை வேடத்தில் க்யூட் டான்ஸ் ஆடிய குழந்தை! – வைரலான வீடியோ!

viral
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 15 அக்டோபர் 2019 (17:41 IST)
சீதை வேடத்தில் சின்ன பெண் பாட்டு ஒன்றுக்கு உற்சாகமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் சீதா வேடம் தரித்த பெண் குழந்தை கூட, ராமன் மற்றும் லக்‌ஷ்மணன் வேடமிட்ட சிறுவர்களும் ஏதோ மேடையில் நடிப்பதற்காக காத்து கொண்டிருப்பது போல தெரிகிறது. ஏற்கனவே மேடையில் ஒரு பாட்டு நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்திருக்கிறது.

பாட்டை கேட்டதும் தன்னை மறந்த அந்த சிறுமி உற்சாகமாக ஆட தொடங்கிவிட்டாள். அந்த சிறுமியின் க்யூட்டான டான்ஸை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

ராமர், லக்‌ஷ்மணன் எல்லாம் அமைதியாக நிற்க சீதா தேவி மட்டும் ஆடும் அந்த அழகான நடனத்தை கண்ட பலர் அதை பல இடங்களுக்கும் பகிரவும் அதை தற்போது இணையம் முழுக்க தீயாக பரவியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :