அயோத்தியில் இடம் யாருக்கு??... விரைவில் தீர்ப்பு

Arun Prasath| Last Updated: வெள்ளி, 8 நவம்பர் 2019 (22:47 IST)
அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்தான தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடம் குறித்தான வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரஞ்சன் கோகோய் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெறப்போவதால் அதற்கு முன்பே தீர்ப்பை வெளியிடவுள்ளதாக வந்த தகவலை வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீர்ப்பை தொடர்ந்து மத ரீதியான பதற்றம் நிலவாமல் இருக்க தமிழ்நாடு, தெலுங்கானா, ஆகிய மாநிலங்களின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயம், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், பார்த்தசாரதி ஆலயம் போன்ற முக்கிய ஸ்தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :