ரா ரா.. சரசக்கு ரா ரா..! – சந்திரமுகி கெட் அப்பில் மாஸ் காட்டிய பாட்டி! வைரல் வீடியோ

chandramukhi
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 15 அக்டோபர் 2019 (15:05 IST)
சந்திரமுகி கெட் அப்பில் பாட்டி ஒருவர் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2005ல் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்த படம் சந்திரமுகி. இதில் ஜோதிகா சந்திரமுகியாக வரும் காட்சிகளும் “ரா ரா சரசக்கு ரா ரா” பாடலும் பலரால் மிகவும் கொண்டாடப்பட்டவை. அந்த காலகட்டத்திலேயே பல சிறுமியர்கள் பள்ளி விழாக்களில் சந்திரமுகி கெட் அப் போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

14 வருடங்கள் கழித்தும் சந்திரமுகி கதாப்பாத்திரத்தின் மீதான மோகம் இன்னும் குறையவே இல்லை. அதற்கு சமீபத்திய எடுத்துகாட்டுதான் இந்த பாட்டியின் டான்ஸ். வயதான பாட்டி ஒருவர் சந்திரமுகி போலவே கெட் அப் போட்டுக்கொண்டு நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலர் அதை ரசித்து கமெண்ட் செய்து ஷேர் செய்தும் வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :