1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (19:17 IST)

500 பெண் தலைவர்கள் பங்கேற்கும் சர்வதேச மகளிர் மாநாடு

'வாழ்க்கை: ஒரு மாயப் பயணம்' -  அமைதி மற்றும் அதிகாரமளிப்பதற்கான கருவியாக ஆன்மீகத்தை  ஆராய 500 பெண்கள் தலைவர்களின் கூட்டம்


500 க்கும் மேற்பட்ட தலை சிறந்த  பெண்கள், கலைஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் 8 வது சர்வதேச மகளிர் மாநாட்டில் (IWC) பங்கு பெறுவார்கள். பிப்ரவரி 23 மற்றும் 25 ஆகிய தேதிகளுக்கு இடையில் பெங்களூரில் உள்ள வாழும்கலையின் (தி ஆர்ட் ஆஃப் லிவிங்) சர்வதேச மையத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது.

சர்வதேச மகளிர் மாநாட்டுக்குக்குத்  தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் கூட்டு நடவடிக்கை என்னும்  இரட்டை இலக்குகள் உள்ளன.  உலகளாவிய பெண் தலைவர்களிடையே இது கூட்டுறவு மற்றும் தலைமைத்துவ வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

இந்த ஆண்டு மாநாட்டின் பேச்சாளர்களில் சிலர்:  அருந்ததி பட்டாச்சார்யா, சேத்னா காலா சின்ஹா(நிறுவனர் - தலைவர் மான் தேஷி வங்கி மற்றும் மன் தேஷி அறக்கட்டளை),  ராணி முகர்ஜி(இந்தி நடிகை), வந்தனா சிவா(சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் நிபுணர்), மதூ ஷா(நடிகை),  மிருதுளா சின்ஹா(கோவாவின் கவர்னர்), அட்ரியானா மாராஸ்(தத்துவார்த்த இயற்பியலாளர் மற்றும் SAP ஆப்பிரிக்காவில் புது கண்டுபிடிப்புக்கள்  துறையின்  தலைவர்), பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க(கேலனியா பல்கலைக்கழகத்தில் பாலியல் படிப்புகளுக்கான மையத்தின்  நிறுவன இயக்குனர்)

"பெண்கள் சமாதானத் தலைவர்கள், மன அழுத்தம் இல்லாத, வன்முறை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். இந்த மாநாடு சமாதான ஒற்றுமையைச் செய்தியாகக்கொண்டது." என்று கூறுகிறார் மாநாட்டின் தலைவரான பானுமதி நரசிம்மன்.

பல துறைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கை சர்வதேச மகளிர் மாநாடு கட்டமைக்கிறது. தங்கள் தாக்கத்தை அதிகரிக்க அது, பெண் தலைவர்களுடன் பணிபுரிந்து, பெண்களின் உலகளாவிய முன்னேற்றத்திற்கு அனைத்து பின்னணிகளிலிருந்தும் உத்வேகம் தரச் செய்கிறது.

2018 மாநாடு ஆன்மீக கருவிகள் உள்ளிட்ட அமைதி மற்றும் அதிகாரமளித்தல் என்னும் செய்தியைப் பரப்பத் தேவையான வழிகளை ஆராயும்.


"சமுதாயத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது, ஒரு சமூகம் வலுவாகவும் இணக்கமாகவும் இருக்கிறதா என்பதை நிர்ணயிக்கும் ஒரே ஒரு அளவுகோல் இதுதான்" என்கிறார் இம்மாநாட்டின் பங்குதாரர்களால் ஒன்றாகிய வாழும்கலையின் நிறுவனர், குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

2005-ல் துவங்கியதில் இருந்து, இம்மாநாடு பன்முகத்தன்மை மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டது. மாநாட்டில் 375க்கும் மேற்பட்ட பிரபல பேச்சாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 5500 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். பலவீனமான மற்றும் மோதல்கள் நிறைந்த பின்தங்கிய பகுதிகளிலுள்ள பெண்களின் நிலையை மேம்படுத்துவதில் சர்வதேச மகளிர் மாநாடு கவனம் செலுத்துகிறது. பாதிக்கப்பட்ட நாடுகளில் பெண்களுக்கு வலுவூட்டுதல் திட்டங்களை மேம்படுத்துவதற்காகவும், ஈராக்கில் விதவைகளுக்கு விரிவுபடுத்தப் பட்ட தொழில்முறை பயிற்சியை மேம்படுத்துவதற்கும் இது, உலக வங்கி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறது.

சர்வதேச மகளிர் மாநாடு வாழும் கலையின் ‘புன்னகையைப் பரிசளியுங்கள்’ திட்டத்தை ஆதரிக்கிறது. 20 இந்திய மாநிலங்களில் 435 இலவச பள்ளிகளில் 58,000க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். ஊக்கமளிக்கும் வகையில், பெண் குழந்தைகள் 48% மற்றும் முதல் தலைமுறை மாணவர்கள் 90% உள்ளனர். பெண் குழந்தை கல்வியை ஊக்குவிப்பது சர்வதேச மகளிர் மாநாட்டின் அடிக்கோடிடப்பட்ட  முக்கியக் கவனப்  பகுதியாகும்.

இந்த ஆண்டு இந்தியாவில் திறந்தவெளி கழிவுகள் இல்லாத மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதில் இம்மாநாடு கவனம் செலுத்தும். முதல் கட்டத்தில் கழிப்பறையைப் பயன்படுத்துவதைப் பற்றி உணர்திறன் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மற்றும் இந்த பகுதிகளில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் அதிகரிக்கவும் கவனம் செலுத்தும். இரண்டாம் கட்டத்தில், 4000 கழிப்பறைகள் கட்டப்படும்.

கடந்த காலங்களில் சர்வதேச மகளிர் மாநாடு, பிற்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருதல்,  சிறப்பான சமூக முன்முயற்சிகளுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத்தடுக்கும்  இயக்கம், மற்றும் குழந்தை மற்றும் பெண்களின் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள்  மூலம் அதிகாரமளித்தல் போன்ற சமூக முனைப்புகளுடன் தொடர்புடையதாக இருந்து வந்திருக்கிறது.