திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (16:04 IST)

ஹெல்மெட் அணிந்தாலும் அபராதம்....

பெங்களூரில் இனி ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டுகளை மட்டுமே அனிய வேண்டும் எனவும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
ஆடம்பர ஸ்போர்ட்ஸ் பைக் வைத்திருப்போர் பொதுவாக அதிக விலையுள்ள வெளிநாட்டு முத்திரையுள்ள ஹெல்மெட்டுகளை அணிவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், இனி இந்திய தரச்சான்றிதழான, ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டுகளை மட்டுமே அணிய வேண்டும் என்று பெங்களூர் டிராபிக் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
 
இந்த உத்தரவு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பெங்களூரில் அமலுக்கு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுகள் அணிந்து வாகனம் ஓட்டினால் கூட அபராதம் விதிக்கப்படுமாம். 
 
மேலும், தாடை வரை மறைக்க கூடிய அளவிலான முழு ஹெல்மெட்டைதான் அணிய வேண்டும் என்றும் பெங்களூர் போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.