Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெங்களூரில் தமிழ் பேசக்கூடாதா? ஒரு ஆட்டோக்காரர் சந்தித்த வேதனை

Last Updated: வியாழன், 1 பிப்ரவரி 2018 (06:59 IST)
கடந்த 28ஆம் தேதி பெங்களூரில் தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த ஒருவர் ஆட்டோவில் பெங்களூரில் உள்ள முக்கிய தெருக்களில் தமிழில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பை செய்தார்

இதனை பார்த்த கன்னட வெறியர்கள் சிலர் அந்த ஆட்டோக்காரரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆட்டோவின் சாவியை பிடுங்கி வைத்து கொண்டு 'தமிழில் என்ன பேசுகிறாய்? கன்னடத்தில் பேசு என்று அடாவடி செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஒலிபெருக்கி அறிவிப்புக்கு உரிய அனுமதி இருக்கின்றதா? என்று சோதனை செய்தார். அனுமதிக்கடிதம் சரியாக இருக்கவே, ஆட்டோக்காரரிடம் பிரச்சனை செய்த கன்னடர்களை காவல்துறை அதிகாரி அப்புறப்படுத்தினார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் பதிவு செய்யும் பலர், பெங்களூரில் தமிழ் பேசக்கூடாதா? என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :