வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (07:39 IST)

28 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகி போட்டி.. மும்பையில் இன்று தொடக்கம்..!

இநதியாவில் கடந்த 1996ஆம் ஆண்டு உலக அழகி போட்டி நடந்த நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகி போட்டி இந்தியாவில் மீண்டும் நடைபெறுகின்றன.  
 
மும்பையில் இன்று 71ஆவது உலக அழகி போட்டி இந்தியாவில் கோலகலமாக  தொடங்குகின்றன
 
இந்தியாவில் உலக அழகி போட்டி தொடங்குவது குறித்து உலக அழகி போட்டியின் அமைப்பு தலைவர் ஜூலியா மோர்லி கூறுகையில், 71ஆவது உலக அழகி போட்டியை இந்தியாவில் நடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைவதாகவும் தனித்துவமான கலாச்சாரம், அழகிய இந்திய நகரங்களையும் காண நாங்கள் காத்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். 
 
 உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள  130 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள். ஒரு மாதம்  நடைபெறும் இந்த போட்டி இந்தியாவில் பல நகரங்களில் நடத்தப்படும். தற்போது உலக அழகியாக இருக்கும் போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா  இந்தியாவில் உலக அழகி போட்டியை விளம்பரப்படுத்தும் பணியில் உள்ளார்.
 
உலக அழகி பட்டத்தை ரீட்டா ஃபரியா, ஐஸ்வர்யா ராய், டயானா ஹெய்டன், யுக்தா முகே, பிரியங்கா சோப்ரா மற்றும் மனுஷி சில்லர் என இதுவரை 6 இந்திய அழகிகள் வென்றுள்ளனர். 
 
Edited by Siva