ஜெய்ஸ்வால் அபார சதம்.. இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து முதல் இமேஜில் 445 ரன்கள் எடுத்தது என்பதை பார்த்தோம்.
அதன்பின் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் வெறும் 10 ரன்களில் அவுட் ஆன ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத வகையில் ரிட்டையர்டு ஹர்ட் ஆனார்,
இந்த நிலையில் இந்தியாவின் ஸ்கோர் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 196 என்ற நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா தற்போது 332 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நாளைய நான்காவது நாள் ஆட்டத்தின் போது இந்தியாவின் ஸ்கோர் 500ஐ தொடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Mahendran