ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2024 (10:59 IST)

அஸ்வினுக்கு பதில் மாற்றுவீரர் இறங்கலாமா? ஐசிசி விதிகளில் இருப்பது என்ன?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 247 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறது.

நேற்று இந்த போட்டியில் அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்நிலையில் தற்போது அவருடைய தாயார் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைப் பார்க்க அஸ்வின் ராஜ்கோட்டில் இருந்து சென்னை கிளம்பியுள்ளதாகவும் பிசிசிஐ தரப்பு அறிவித்துள்ளது. 

இதனால் அஸ்வினுக்கு பதில் மாற்று வீரரை விளையாட வைக்க ஐசிசி விதிகளில் இடமிருக்கிறது. ஆனால் அதற்கு எதிரணி கேப்டனான பென் ஸ்டோக்ஸ் அனுமதி அளிக்க வேண்டும். இதுவரை அஸ்வினுக்கு பதில் யாரையும் இந்திய அணி இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.