செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2017 (15:15 IST)

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி?

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றாலும் மீண்டும் குஜராத்தில் ஆட்சி அமைப்பது பாஜகதான் என்றே தெரிவித்தன

இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்த பின்னர் எடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் மீண்டும் பாஜக ஆட்சியே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து முக்கிய ஊடகங்கள் எடுத்துள்ள தனித்தனியான கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 100க்கும் அதிகமான தொகுதிகள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 64 முதல் 75 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் இமாச்சல பிரதேச மாநிலத்திலும் பாஜகவே வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் கருத்துக்கணிப்புகள் பல பொய்த்துபோன வரலாறு இந்தியாவில் உண்டு என்பதால் தேர்தல் முடிவு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.