வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2017 (08:36 IST)

குஜராத் தேர்தல்: 2 வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

குஜராத் தேர்தல் முடிவை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக முடிந்து இன்று இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளது. 93 தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 851 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்

இரண்டாம் கட்ட தேர்தலில் 2.20 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இரண்டாவது மற்றும் இறுதிகட்ட தேர்தலில் பாஜக- காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளதால் அரசியல் களம் பரபரப்புடன் உள்ளது

இன்று பிரதமர் மோடி , பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளதால் விஐபிக்கள் வாக்களிக்கவுள்ள வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் குஜராத் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் ,வாக்காளர்கள் அதிக அளவில் வாக்கு பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும், ராகுல்காந்தி, 'மாநிலத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்' என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.