ஓவராக பேசிய எச்.ராஜாவை ஓரங்கட்டிய மக்கள்
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய இந்திய மக்களவைத் தேர்தல் மே 19 ஆம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்றன. உலகமே உற்றுக்கவனித்துக்கொண்டிருக்கும் இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் அடுத்த பிரதமர் யார் ? அடுத்ததாக ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார் என்பதுகுறித்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் காலை 8 மணிக்கு தொடங்கின.
இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே நாடுமுழுவதும் பாஜக முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி பின் தங்கிய நிலையிலேயே இருந்தது.
பிற்பகல் வேளையின் போது நாடு தழுவிய அளவில் பாஜக தனிப்பெரும்பான்மைபெற்று ஆட்சி அமைக்கும் என்ற எண்ணம் மோலோங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது பாஜக 339 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேசமயம் காங்கிரஸ் 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிமன்றக்குழு கூட்டம் இன்று மாலை 5:30 மணிக்கு டெல்லியில் நடைபெறுவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
.
இந்நிலையில் தமிழகத்தில் தூத்துக்குடியில் பாஜக சரர்பில் போட்டியிட்ட பாஜக தமிழக தலைவர் தமிழிசை, திமுக வேட்பாளர் கனிமொழியைவிட குறைந்த வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.
அதேபோல் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட எச்.ராஜா, திமுக சார்பில் போட்டியிட்ட சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தை விர குறைந்த வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் சோர்வுற்றுள்ளனர். என்ன இருந்தாலும் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறி வந்த ராஜாவுக்கு தமிழக மக்கள் தம் வாக்குகள் மூலமாக அவருக்கு பெரிய ’தோல்வி அடிகொடுப்பார்கள்’ என்று பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்...
இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவுறாத நிலையில் எச்.ராஜா முன்னிலை பெறுவாரா இல்லையா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். ஆனால் தமிழக அளவில் பாஜக பின் தங்கியிருந்தாலும் கூட இந்தியாவில் மோடியின் தலைமையிலான பாஜக மத்தியில் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால் சற்று ஆறுதல் தேடிக்கொள்வார்கள் என்றே தெரிகிறது.