திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2019 (15:23 IST)

உலகக் கோப்பையில் வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் - ராகுல் டிராவிட்

உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். 
நியுசிலாந்து, ஆஸ்திரேலிய போன்ற சில நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அறிவித்துவிட்ட நிலையில், இந்திய அணியும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலக கோப்பையில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல் பின்வருமாறு...
 
விராட் கோலி - கேப்டன்
ரோகித் ஷர்மா - துணை கேப்டன் 
எம்.எஸ்.தோனி 
ஷிகர் தவான்
ஹர்திக் பாண்ட்யா
கே.எல்.ராகுல்
ரவீந்திர ஜடேஜா
புவனேஷ்வர் குமார்
ஜஸ்ப்ரித் பும்ரா
முகமது ஷமி
கேதர் சாதவ்
தினேஷ் கார்த்திக்
விஜய் சங்கர்
யுஸ்வேந்த்ரா சஹால்
குல்தீப் யாதவ்
 
இந்நிலையில் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள்  தங்கள் அணி வீரர்களின் தேர்வுக்கு தயாராகிவருகின்றனர். 

நம் இந்திய அணி வீரர்கள் தேர்வில் பண்ட் மற்றும் ராயுட் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பிவருகின்றனர்.
 
இந்நிலையில் முன்னாள் கேப்டன் மற்றும் இளையோர் அணி பயிற்சியாளரான ராகுல் திராவிட் இதுபற்றி கூறியுள்ளதாவது :
 
உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய  அணி வீரர்கள் களத்தில் நல்லமுறையில் செயல்ல்பட வேண்டும். கடந்த முறை உலகக்கோப்பை தொடருக்கும் தற்போது நடக்கவுள்ள உஅலகக்கோப்பை தொடருக்கும் வேறுபாடு உள்ளது.   கடந்த 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நய்டைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ரன்கள் எடுப்பது சிரமமாக இருந்தது. ஆனால் தற்போது மைதானங்கள் பெருமளவு தட்டையாக உள்ளது.  அதனால் ரன்கள் அதிகளவு எடுக்க வாய்ப்புள்ளது.  என்ரு தெரிவித்துள்ளார்.