வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 மே 2019 (15:19 IST)

பிரச்சாரத்திற்கு செல்லாதது ஏன்? பிரேமலதா விளக்கம்!

நாளை முதல் பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது. தேர்தல் வாக்கு சேகரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முறமாக களம் இறங்கியிருக்கின்றன. அதிமுகவுடன் மக்களவை தொகுதியில் கூட்டணி அமைத்த கட்சிகள் இடைத்தேர்தலில் ஆதரவு பிரச்சாரம் செய்வதாக கூறியிருந்தன. அதிமுகவும் அதன் கூட்டணி 
 
கட்சிகளும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் தேமுதிக பிரமுகர்கள் யாரும் இன்றுவரை பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.
 
சென்னை சாலிகிராமத்தில் இன்று (மே 13) தேமுதிக கட்சியின் சார்பாக தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, அங்கிருந்த மக்களுக்கு இளநீர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார். அப்போது நிருபர்களுக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறியதாவது, “பிரச்சாரம் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை. இது முடிவு செய்யப்பட்டதுதான். முதல்வர், துணைமுதல்வர் ஏற்கனவே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் நான் செல்லவில்லை. நாளை முதல் ஒட்டப்பிடாரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.” என்று தெரிவித்தார்.
 
குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், “கோடைக்காலம் வருவதால் நீர்நிலைகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும். மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தேமுதிக சார்பில் வலியுறுத்தப்படும்” என்றும் தெரிவித்தார். மூன்றாவது அணி அமைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.