செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (08:38 IST)

இந்த உணவுகளை சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்!

Stress
தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சினை மன அழுத்தம். இந்த மன அழுத்த பிரச்சினையை சில உணவு வகைகள் குறைப்பதுடன், நல்ல மன ஆரோக்கியத்தையும் வழங்கும் அதுகுறித்து காண்போம்.


 
  • விட்டமின் பி சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
  • கொண்டைக்கடலை மற்றும் கீரைகளில் விட்டமின் பி செறிவாக நிறைந்துள்ளது.
  • கேரட் உள்ளிட்ட கடித்து சாப்பிடக்கூடிய காய்கறிகளை சாலட்டாக சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.
  • வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோன் என்ற வேதிப்பொருள் நல்ல தூக்கத்தை அளித்து மன அமைதி உண்டாக்குகிறது.
  • விட்டமின் சி நிறைந்த உணவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை குறைக்க உதவுகிறது.
  • சோயா பீன்ஸில் ட்ரிப்டோன் உள்ளதால் மன அழுத்தம் குறைக்க சோயா பொருட்கள் சாப்பிடலாம்.
மன அழுத்தம் தொடர்பான ஆலோசனைகளுக்கு மருத்துவ நிபுணரை அணுகுங்கள்.