புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (11:34 IST)

விலை குறைந்தது ரெட்மி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
சியோமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களில் ஒன்றான ரெட்மி நோட் 9 ப்ரோ மீது ரூ.3,000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பிற்கு பின்னர் ரூ.16,999 க்கு விற்கப்பட்ட ஸ்மார்ட்போன் தற்போது  ரூ.13,999 க்கு விற்பனை ஆகிறது. குறிப்பாக Mi.com வழியாக வாங்கும் போது இந்த ஸ்மார்ட்போனின் மீது கூடுதலாக சில சலுகைகளும் கிடைக்கிறது.