ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம்!
பிரபல குழந்தைகள் பராமரிப்பு பொருட்களை விற்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான பராமரிப்பு பொருட்கள், சோப்பு, ஷாம்பூ ஆகியவற்றை விற்பனை செய்து வரும் நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சன். அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படு இந்நிறுவனத்தின் பொருட்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய வேதியல் பொருட்கள் இருப்பதாக பல பகுதிகளிலும் குற்றச்சாட்டு எழுந்தபடி உள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய ’ரிஸ்பெரிடால்’ என்ற மருந்து பொருளில் உள்ள வேதியல் கலவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், இதை உபயோகப்படுத்தும் ஆண்களின் மார்பகங்கள் பெண்களை போல் மாற்றமடைவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்காவின் பென்சில்வேனியா நீதிமன்றம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் இதுகுறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளனர்.