வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (17:27 IST)

சிறுமி க்ரேட்டா தன்பெர்க் நோபல் பரிசு பெறுவாரா? – அறிஞர்கள் விவாதம்!

நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வரும் சூழலில் சிறுமி க்ரேட்டா தன்பெர்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் உலக அமைதி உள்ளிட்ட முக்கியமான தலைப்புகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்புகள் நாளொன்றுக்கு ஒரு துறை என்ற ரீதியில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு பெறுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடன் சிறுமி க்ரேட்ட தன்பெர்கிற்கு வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உலக வெப்பமயமாதலை எதிர்த்து கடந்த வருடம் தனது போராட்டத்தை தொடங்கினார் சிறுமி க்ரேட்டா. பல கல்லூரிகள், பல்கலைகழகங்கள் உள்ளிட்டவற்றில் இதுகுறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட க்ரேட்டா, சமீபத்தில் ஐ.நா கவுன்சிலில் உலக தலைவர்களை கேள்வி கேட்டு கவனம் பெற்றார்.

இந்நிலையில் உலக அமைதிக்கான பரிந்துரையில் க்ரேட்டா சேர்க்கப்பட வேண்டும் என ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஆனாலும் நேரடியாக க்ரேட்டாவுக்கு மட்டும் நோபல் பரிசை அளிக்கமுடியாது. அவர் சிறுமி என்பதால் வேறொருவருடன் விருதை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு என கூறப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.