1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (18:24 IST)

அடுத்தடுத்து உயிரிழக்கும் யானைகள், உலகையே உலுக்கும் துயர சம்பவம்

தாய்லாந்தில் சில தினங்களுக்கு முன் 6 யானைகள் அருவியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து 5 யானைகள் தவறி விழுந்து உயிரிழந்த செய்தி உலகையே உலுக்கியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் உள்ள கவோயை தேசிய பூங்காவில் ஹா நரோக் என்னும் அருவி உள்ளது. அந்த அருவிக்கு ஒரு குட்டி யானை தண்ணீர் குடிக்க சென்றது, அப்போது அந்த யானை குட்டி தவறி அருவிக்குள் விழுந்தது. அதன் பின்பு அந்த குட்டியை காப்பாற்ற சென்ற தாய் யானை உட்பட, 5 யானைகள் அருவிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தன. இந்த சம்பவம் உலகையே உலுக்கியது.

இந்நிலையில், தற்போது அதே அருவியில் மேலும் 5 யானைகள் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. ஹா நரோக் நீர்வீழ்ச்சியை நரகத்தின் நீர்வீழ்ச்சி என்று கூறுவார்களாம், கடந்த 1992 ஆம் ஆண்டு கிட்டதட்ட 8 யானைகள் இந்த அருவியில் விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மேலும் 5 யானைகள் உயிரிழந்துள்ளதை உறுதிபடுத்துகின்றன.

இது குறித்து வன உயிர் நண்பர்களின் அறக்கட்டளை நிறுவனர் எட்வின் வீக் கூறுகையில், யானைகள் எப்போதும் கூட்டமாக வாழ்பவை, மேலும் அவை உணவு தேடலுக்காக கூட்டமாக பாதுகாப்பாக செல்லும். இவ்வாறு கூட்டத்திலிருந்து விலகிய மனமுடைந்து அருவியில் விழுந்து இறந்திருக்கலாம்” என கூறியுள்ளார். 11 யானைகள் அருவியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.