திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (11:47 IST)

IPL 2024: வாங்கிய அடியை திருப்பி கொடுக்குமா சிஎஸ்கே? இன்று LSG உடன் மோதல்!

CSK vs LSG
இன்று ஐபிஎல் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.



ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் CSK vs LSG அணிகள் மோதிக் கொள்கின்றன. கடந்த 19ம் தேதி இதே இரு அணிகளும் லக்னோ மைதானத்தில் மோதிக் கொண்டன. அப்போது லக்னோ அணி சிஎஸ்கேவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இன்று சென்னை அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக கலக்கலாக விளையாடிய டெவான் கான்வே இன்றைய மேட்ச்சில் பேட்டிங் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல இங்கிலாந்தின் அதிரடி பவுலர் ரிச்சர்ட் க்ளீசனையும் சிஎஸ்கே இன்று களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையிலான போட்டிகளில் பல விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் காட்டிய லக்னோ வீரர் மயங்க யாதவ் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அதேசமயம் டி காக், கே எல் ராகுல் பேட்டிங் செயல்பாடுகள் மேம்பட்டுள்ளது. இதனால் இன்றும் கத்திமுனை போட்டியாக இந்த போட்டி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K