சாம் கரணின் ஒரே ஓவரில் 30 ரன்கள்… டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டம்!
ஆஸ்திரேலிய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியாக நேற்று சவுத்தாம்டன் மைதானத்தில் முதல் டி 20 போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 173 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். அவர் இங்கிலாந்து பவுலர் சாம் கரண் வீசிய ஒரே ஓவரில் அனைத்து பந்துகளையும் பவுண்டர்களிக்கு விரட்டி 30 ரன்கள் சேர்த்தார். இந்த ஓவரில் அவர் மூன்று பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி அணி வென்ற நிலையில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.